தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரியை வெட்டி கொலை செய்த மூன்று பேர் கைது..!

0 1277

தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரியை போதையில் வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜாராம் மடத்தெருவில் வசித்து வரும் பிரதீப் என்பவரின் வீட்டிற்கு வந்த கஞ்சா போதையில் வந்த சிவக்குமார், விக்னேஷ், சூர்யா ஆகியோர் வந்து அவரிடம் கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது.

அவர், கஞ்சா இல்லை என்று கூறியதால், தகராறு செய்தவர்களை பிரதீப் தன் வீட்டிலிருந்த கொடுவாளை எடுத்து வந்து வெட்டியதையடுத்து, அவரிடமிருந்து கொடுவாளை பறித்த மூன்று பேரும் திருப்பி அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதற்கிடையே, பிரதீப்பை கொலை செய்வதற்கு முன்பாக கஞ்சா போதையில் அரசு மதுபானக்கடையில் புகுந்து தாக்குதல் நடத்தி ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி மாமூல் கேட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பிரதீப் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படும் நிலையில் அவர் மீது வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments