அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்..!

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது கர்ப்பிணி மனைவி சத்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டு இருந்தார்.
அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் உறவினர்களால் கவனிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சத்யாவுடன் யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர்.
கண் அயர்ந்த சத்யா விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது கண்டு செவிலியர்கள் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments