உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை களமிறக்க உள்ளதாக, ரஷ்யா தகவல்..!

0 5224

உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்து போர்க்களத்திற்கு அனுப்பி வைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது.

சீன அதிபரின் ரஷ்ய விஜயத்திற்கு பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், போருக்கு முன்பே தனது படை பலத்தை, 11 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த எடுத்த முடிவின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக போரில் ரஷ்யா பெரிய அளவில் வெற்றி பெறாதது மற்றும் விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த படைத்திரட்டல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments