இந்தியத் தூதரகம் மீதான காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதல்.. பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையுடன் ஆலோசித்து வருவதாக அரசு அறிவிப்பு..!

0 1222

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் தொடுத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியத் தூதரகம் மீதான வன்முறையை ஏற்க முடியாது என்று உறுதியுடன் தெரிவித்தார்.

தூதரக ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது முதன்மையான பணியாகும் என்றும் ஜேம்ஸ் கிளவர்லி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments