காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் முதல் முறையாக நெல்லையில் துவக்கம்...!

நெல்லையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உண்டாகும் சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் நோக்கில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்குப் பின் அலட்சியமாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துவதுடன், மண்ணில் புதையும் பட்சத்தில் பல்வேறு சூழலியல் கேடுகளையும் ஏற்படுத்தும்.
அதனைத் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments