"எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் டுவீட் ஒன்றை இயற்றி தா..." - சாட் ஜி.பி.டி.யிடம் கேட்ட டுவிட்டர் பயனர்..!

0 3270

இணையத்தில் பிரபலமடைந்து வரும் சாட் ஜி.பி.டி. தேடுபொறியால் இயற்றப்பட்ட கேள்விக்கு டுவிட்டர் சி.இ.ஒ. எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

டுவிட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் கேள்வி ஒன்றை இயற்றி தருமாறு சாட் ஜி.பி.டி.யிடம் கேட்டுள்ளார்.

”எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிரபஞ்சம் பற்றிய மக்களின் புரிதலை எவ்வாறு மேம்படுத்த போகிறது ?” என கேட்குமாறு சாட் ஜி.பி.டி. பதிலளித்தது.

அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த அந்த நபர், எலான் மஸ்கை குறி வைத்து, சாட் ஜி.பி.டி. சரியான கேள்வியை கேட்டுள்ளதாக பதிவிட்டார்.

சாட் ஜி.பி.டி.யின் குறி தவறிவிட்டதாக எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதே சமயம், எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் சாட் ஜி.பி.டி. கேள்வி கேட்டுவிட்டதாக டுவிட்டர் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments