பிரதமர் பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!

0 3363

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக பாஜக எம்.எல்.ஏ Purnesh Modi வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரான நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. எனினும், உடனடியாக அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு அனுமதி வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments