நான் அரசியலுக்கு வருவது குறித்து காலம் பதில் சொல்லும்: வடிவேலு

0 3492
அரசியலுக்கு வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் மதுரை திருப்பாலையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் வடிவேலு பின்பு செய்தியாளர்களிடம் இக்கருத்தினை தெரிவித்தார். 

சிறைச்சாலை அனுபவத்தை மிசா குறித்த புத்தகத்தை கமலஹாசன் படமாக எடுப்பதாக இருந்தது. எடுக்க முடியவில்லை. எடுத்திருந்தால், முதலமைச்சர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினால் தான், மு.க.ஸ்டாலின் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்.

ஆனால், அவர் அரசியல் பணிக்காக அந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். கமலஹாசன், நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கேரக்டரை செய்ய சொல்லி கெஞ்சுவோம். அரசியலுக்கு வருவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments