அமெரிக்காவில் 3 பேரை படுகொலை செய்த சைகோ கொலைகாரனுக்கு 75 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவில், பெண்ணை படுகொலை செய்து, அவரது இதயத்தை சமைத்து உறவினர்களுக்கு பரிமாறி, பின் அவர்களையும் கொலை செய்த கொடூரனுக்கு 75 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
44 வயதான லாரன்ஸ் பால், சிறையிலிருந்து விடுதலை ஆன சில வாரங்களிளேயே பக்கத்து வீட்டில் வசித்த ஆன்டிரியா என்பவரை கொலை செய்து, அவரது இதயத்தை வெட்டி எடுத்து, மாமா வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளான்.
அங்கு அதனை சமைத்து, வீட்டில் இருந்தவர்களுக்கு பரிமாறியுள்ளான். பின் தனது மாமாவையும், 4 வயதே ஆன அவரது பேத்தியையும் கத்தியால் குத்தி கொலை செய்தான்.
காயங்களுடன் உயிருக்கு போராடிய அவனது அத்தை அளித்த தகவலின் பேரில் போலீசார் அவனை கைது செய்தனர். அவனுக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் லாரன்ஸுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆக்லஹாமா மாநில ஆளுநரின் தவறால் சிறை தண்டனை குறைக்கப்பட்டு, 3 ஆண்டுகளில் விடுதலையாகி இந்த கொடூர கொலைகளை செய்துள்ளான்.
Comments