லாரியில் ஸ்பைடர்மேன்..! குடிச்சிருக்கியான்னு கேட்டதுக்கு இப்படியாண்ணே செய்வ... ? லாரியை விரட்டிப்பிடித்த போலீஸ்

0 1996

மது போதையில் வாகனம் ஓட்டுவதை லாரியில் ஏறி தட்டிக்கேட்ட இளைஞரை, கீழே இறங்க விடாமல் அதிவேகத்தில் லாரியை ஓட்டிச்சென்ற குடிகார ஓட்டுனரை போலீசார் விரட்டிப்பிடித்தனர். ஸ்பைடர் மேன் போல லாரியில் தொங்கிச் சென்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்..

ஸ்பைடர் மேன் போல லாரியின் வெளியில் தொங்கிச்செல்லும் இவர் தான் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த அந்த இளைஞர்..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று கோட்டகுப்பம் இசிஆர் சாலையில் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் பார்த்து சமூக அக்கறையுடன் அந்த லாரியை நிறுத்தி உள்ளனர். ஒரு இளைஞர் ஓட்டுனர் ஏறும் பக்கவாட்டு பகுதியில் ஏறி, குடிச்சிறுக்கியா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அடுத்த நொடி லாரியில் ஏறிய அந்த இளைஞர் இறங்குவதற்குள் புயல் வேகத்தில் லாரியை கிளப்பிக் கொண்டு சென்றுள்ளார் அந்த போதை ஓட்டுனர்

தன் லாரிக்கும், தன் குடலுக்கும் போட்ட டீசலுக்கு பங்கம் இல்லாமல், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வின்டீசல் போல சந்திப்பு பகுதிகளிலும், சாலை வளைவுகளிலும் லாரியை அசுர வேகத்தில் இயக்கிச்சென்றார்

அதிவேகமாக செல்லும் லாரியின் பக்கவாட்டில் லோ பட்ஜெட் ஸ்பைடர் மேன் போல ஒருவர் தொங்கியபடியே செல்வதை பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த குடிகார ரேசர் லாரியை நிறுத்த வில்லை

இதனை வீடியோவாக எடுத்தபடியே சில இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் விரட்டிச்சென்றனர். போதை ஓட்டுனரின் இந்த விபரீத ரேஸ் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை விரட்டிச்சென்று எச்சரித்து மடக்கினர். அந்த இளைஞர் பத்திரமாக கீழே இறங்கினார்.

லாரியில் அசுர வேகத்தில் சென்ற அந்த அரைபாடி அர்னால்டை இறக்கி விசாரித்த போலீசார் குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ஓட்டுநருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்ததாக கூறப்படுகின்றது.

 இருசக்கர வாகனங்களை மறித்து குடிபோதையில் வாகனம் ஓட்டுகிறார்களா ? என்று சோதனை செய்யும் போலீசார் கனரக வாகன ஓட்டுனர்களையும் சோதித்து மது அருந்தி இருந்தால் வாகனங்களை பறிமுதல் செய்து விபரீத விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments