இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 2090

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், லேசான அல்லது தீவிர காய்ச்சல், அதிக இருமலுடன் கூடிய குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தாலே போதுமானது எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.

தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றுடன் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, உணவு உண்ணாமை ஆகியவை இருந்தால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர மருத்துவமனை ஊழியர்கள், கர்ப்பிணிகள், இணைநோய் உள்ளோர் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments