72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் திட்டம்..!

0 738

பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் 72 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களை வாங்க ரியாத் ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் இலக்குடன் அது செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் போயிங் வரலாற்றில் ஐந்தாவது பெரிய வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். போயிங் விமானங்களை சவூதி அரேபியா வாங்குவதன் மூலம் அமெரிக்காவில் இது சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம், 2030ஆம் ஆண்டுக்குள் 330 மில்லியன் பயணிகளை கையாள்வதுடன், 100 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் சவுதி அரேபியாவின் இலக்கை நிறைவேற்றும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments