இந்திய வன ஆராய்ச்சி, கல்வி குழு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம்-4 பேர் கைது

0 959

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய வன ஆராய்ச்சி, கல்வி குழு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானா இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

எழுத்துத்தேர்வின்போது தேர்வு எழுதியவர்களின் புகைப்படம், கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வில் 4 பேரின் புகைப்படம், கைரேகை ஒத்துப்போகவில்லை. இதனால் அந்த நான்கு பேரையும் சாய்பாபா காலனி போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு குறித்து பேட்டியளித்த கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆள்மாறாட்ட வழக்கில் 4 பேரையும் இயக்கிய முக்கிய குற்றவாளி குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், தேர்வில் வேறு யாரேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments