இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு..!

0 2153

ஈரோடு பவானி அருகே இளம்பெண் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டின் அருகே பெண் ஒருவருடன் கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், திடீரென அப்பெண் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து, அங்கு கூடிய அப்பகுதியினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆசிட் வீசிய மீனாதேவி என்ற பெண் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு 6 வயதில் மகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கும் அவரது உறவினரான கார்த்திக்கிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மீனாதேவியிடம் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக கார்த்திக் கூறியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் ஆசிட்டை வீசியதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments