சக மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!

திருச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன், காலை பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடியதாக கூறப்படுகிறது.
அப்போது, சில மாணவர்கள் பரஸ்பரம் சிறு சிறு கற்களை வீசிய போது மோதல் ஏற்பட்டதாவும், அச்சமயம் கீழே விழுந்த மெளலீஸ்வரனை சிலர் மிதித்து தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவன் உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Comments