விரும்பிய மதுபானங்கள் இல்லையென கூறியதால் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து சூறை..!

0 965

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டாஸ்மாக் கடையில் தாங்கள் விரும்பிய மதுபானங்கள் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்து,  கடையை சூறையாடியதாக வங்கி ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

பிள்ளாநல்லூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வந்து மதுபானம் கேட்டுள்ளனர்.

அவர்கள் கேட்ட மதுபானம் இல்லையென ஊழியர் கூறியதால் ஆத்திரமடைந்து 4 பேரும் மதுபாட்டில்களை உடைத்து சூறையாடியுள்ளனர். மேலும் ஊழியர் பிரபாகரனை தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் காயம் ஏற்பட்டது. மேலும் கடையில் இருந்த பணத்தை திருடியதாகவும் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments