சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு..!

0 812

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய அமர்வில் சீன மக்கள் குடியரசின் தலைவராகவும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சீன மக்கள் குடியரசின் தலைவராக இருந்துவரும் ஜி ஜின்பிங், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் ஒருவர் சீன அதிபராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments