இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்தாவிற்கு பதிலாக நுசாந்த்ராவாக மாற்ற முடிவு..!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவில் உள்ள நுசாந்த்ராவுக்கு மாற்றப்பட உள்ளது.
இதற்காக 32 பில்லியன் டாலர் செலவில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட ஜகார்த்தா 2050 க்குள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நெரிசல், நிலநடுக்கம் ஏற்படுவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஜகார்த்தாவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக தலைநகரை மாற்ற இந்தோனேஷிய அரசு தீர்மானித்துள்ளது.
ஆனால் போர்னியோவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Comments