தன்னை கைது செய்ய வந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், சுட்டுக் கொல்லப்பட்டார்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தன்னை கைது செய்ய வந்த போலீசார் 3 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர், சுட்டுக் கொல்லப்பட்டார்.
பரோலில் வந்து தலைமறைவான நபரை போலீசார் தேடிச் சென்றபோது, அவர் கார் காரேஜுக்குள் (garrage) சென்று ஷட்டரை மூடிக்கொண்டார்.
காரேஜுக்குள் கண்ணீர் புகையை பாய்ச்சி அவரை வெளியேற்ற போலீசார் முயற்சித்தபோது, திடீரென வெளிப்பட்ட அந்த நபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் போலீசார் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் ஒருவர் பதிலுக்கு சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments