விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை விலையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் - இபிஎஸ்

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை விலையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலங்களில் ஆற்றுப் பாசனம் மற்றும் ஏரிப் பாசனங்களில் தண்ணீர் வரத்து இல்லாத நேரங்களில், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் பாசனம் போன்றவற்றையே நம்பி விவசாயப் பணிகள் நடைபெறும் என்றும், இந்த நேரத்தில்தான் மின்சாரம் விவசாயத்திற்கு அதிகமாக தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்க முடியாது என்றும், முறை வைத்துதான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Comments