28 நாட்கள் பாதாள அறையில் சிக்கியிருந்த தாய் நாயும், மூன்று குட்டிகளும் பத்திரமாக மீட்பு..!

துருக்கியில், 28 நாட்களாக பாதாள அறையில் சிக்கியிருந்த நாயும், அந்த இடைப்பட்ட நாட்களில் அது ஈன்ற மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
ஹட்டாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் பாதாள அறையில் சினை நாய் ஒன்று சிக்கிக்கொண்டது.
நாய் உரிமையாளரின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த விலங்குகளுக்கான பிரத்யேக மீட்பு குழுவினர், பல மணி நேரம் போராடி நாயையும், அது ஈன்ற 3 குட்டிகளையும் மீட்டனர்.
பாதாள அறையில், ஒரு பை நிறைய நாய்களுக்கு வழங்கப்படும் உணவு இருந்ததால், உணவு தட்டுப்பாடின்றி அவை நாட்களை கழித்துள்ளன.
Comments