இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் இருந்த மரிஜுவானா செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு அழிப்பு..!

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த மரிஜுவானா எனப்படும் கஞ்சா தோட்டத்தை போலீசார் தீயிட்டு அழித்தனர்.
வடக்கு சுமத்ராவின் ஆச்சே என்ற இடத்தில் உள்ள இத்தோட்டம் கடந்த மாதம் உள்ளூர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று 11 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த கஞ்சா செடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.
உலகிலேயே மிக கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ள நாடாக இந்தோனேசியா உள்ளது.
Comments