பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடம்.. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஐ.நா. கருத்து..!

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத்தடை, பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள் செல்லத் தடை, அரசு அலுவலகங்களிலிலிருந்து பணி நீக்கம் என பெண்களை வீட்டிற்குள் முடக்கும் நோக்கத்துடன் தாலிபான்கள் சட்டம் இயற்றிவருவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
கணவர் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற்ற பெண்களை, முன்னாள் கணவன்களிடமே தாலிபான்கள் திருப்பிஅனுப்பிவைப்பதால், பல பெண்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
Comments