மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சர்பிரைஸ் விசிட் அடித்த முதலமைச்சர்..!

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பெண் காவலர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.
பின்னர், பெண் காவலர்களின் குறைகளையும், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல் நிலைய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர், பெண் காவலர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
மகளிர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் சர்பிரைஸாக காவல் நிலையம் வந்து, தங்களுக்கு வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிப்பதாக, காவலர்கள் தெரிவித்தனர்.
Comments