தனியார் வங்கி ஏ.டி.எமில் ரூ.1.15 கோடி ரூபாயை மோசடி செய்த பெண் கைது!

0 7627

கள்ளக்குறிச்சி அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் வைக்க வேண்டிய ஒரு கோடி ரூபாயை மோசடி செய்ததாக, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கராபுரத்தில் இயங்கிவரும் பல்பொருள் அங்காடியில் நிறுவப்பட்டிருந்த ஹிட்டாச்சி ஏ.டி.எம். இயந்திரத்தின் பணம் இருப்பு மற்றும் பராமரிப்பு பொறுப்பை அதன் உரிமையாளரான விஜயகுமார் என்பவரது மனைவி பிரியங்கா கவனித்து வந்தார்.

இதன்படி ஹிட்டாச்சி நிறுவனம் மும்பையிலிருந்து ஐசிஐசிஐ, வங்கிக்கு அனுப்பும் பணத்தை, பிரியங்கா தனக்கு வரும் ரகசிய எண்ணை வங்கியில் காண்பித்து, பணத்தை எடுத்துவந்து ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்பி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு முதல் ஏ.டி.எம். பழுதானதால் தவறுதலாக ரகசிய குறியீட்டு எண் தொடர்ந்து பிரியங்காவிற்கு வந்தது.

இதை பயன்படுத்தி, ஒரு கோடியே 15 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பிரியங்கா தனது வங்கிக் கணக்கில் செலுத்தி மோசடி செய்ததாக, ஹிட்டாச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜேம்ஸ் பிலிப் சங்கராபுரம் போலீசில் புகாரளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments