இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

0 1235

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். 

மேற்குக் கரைப் பகுதியில் நேற்று இரு யூத சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேற்குக் கரையில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது ஹமாஸ் இயக்கப் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றனர்.

மேலும் 11 பேர் பலத்த காயமடைந்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலில் உதவியதாகவும், திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments