நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஆதி தமிழர் கட்சியினர் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் 8 பேர் கைது..!

சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஆதி தமிழர் கட்சியினர் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக போரூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தை, ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகையிட சென்ற போது இரு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு மாறி, மாறி தாக்கிக்கொண்டதில் இரு தப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போரூர் போலீசார், இரு கட்சிகளில் இருந்தும் தலா நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
Comments