மேகாலயா முதலமைச்சரமாக கான்ராட் சங்மா பதவியேற்பு

0 1208

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 அமைச்சர்களுக்கு கவர்னர் பாகுசவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரஸ்டோன் டைன்சாங் (Prestone Tynsong) மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் (Sniawbhalang Dhar) ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments