நாகர்கோவிலில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!

0 896

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

56 ஆயிரத்து 809 சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் 'கலைவாணர் மாளிகை' என்ற பெயரில், புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலக கட்டிடத்தை பார்வையிட்ட முதலமைச்சர், மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் மற்றும் கவுன்சிலர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர், புதிய அலுவலக கட்டிடத்தில், மேயர் மகேஷை அவரது இருக்கையில் அமர வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments