பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்.. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஈரான் தலைவர் பரிந்துரை

ஈரானில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறும் அந்நாட்டின் தலைவர் அயத்தொல்லா அலி கமெனி பரிந்துரைத்துள்ளார்.
ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண், நல்லொழுக்க போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல், பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகளின் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
பெண் கல்விக்கு எதிரானவர்களால் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments