சென்னை மாநகரில் நீதிமன்ற உத்தரவு பெற்று கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் ஒரே ஒரு தனியார் பேருந்து..!

சென்னை மாநகரில் நீதிமன்ற உத்தரவு பெற்று கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே கலைவாணி என்ற தனியார் பேருந்து மட்டும் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து செம்பரம்பாக்கம் வரை இயக்கப்பட்டு வருகிறது.
1972-ம் ஆண்டு தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டதுடன், ஒரு உரிமையாளர் 15 பேருந்துகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என உச்சவரம்புச் சட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவந்தது.
அப்போது ஒரே ஒரு பேருந்தை மட்டுமே வைந்திருந்த கலைவாணி ட்ரான்ஸ்போர்ட், நீதிமன்ற உத்தரவு பெற்று தொடர்ந்து இன்று வரை இயக்கி வருகிறது.
Comments