அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில் பச்சை குடில் திருவிழா.. 101 கிடாக்கள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து..!

0 1422

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அக்கினி வீரபத்ரன் முனியாண்டி சுவாமி கோவில், கிடாவெட்டு விழாவில் நடைபெற்ற அசைவ அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

கிராம மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பச்சை குடில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவாக, நள்ளிரவு 101 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டு பெரிய பாத்திரங்களில் கரி விருந்து தயாரிக்கப்பட்டு, திருபுவனத்தில் 4 ரத வீதிகளின் இருபுறமும் நீண்ட வரிசையில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments