மங்களூர், கோவை ஆகிய 2 குண்டுவெடிப்புகளுக்கும் ISKP பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு..!

0 3058
மங்களூர், கோவை ஆகிய 2 குண்டுவெடிப்புகளுக்கும் ISKP பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு..!

கோவை மற்றும் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ISKP பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.

கோவை உக்கடத்திலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் கடந்த அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதேபோல் மங்களூரில் கடந்த நவம்பர் மாதம் ஆட்டோ ரிக்சாவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்து சிதறியது.

இந்த 2 சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வாய்ஸ் ஆப் குராசான் எனும் பத்திரிகையில் வெளியிட்ட செய்தி மூலம், அந்த தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் இன் கொரோசான் பிராவின்ஸ் என்ற ISKP பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments