போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரின் 60 நீர்யானைகளை இந்தியாவுக்கு அனுப்ப கொலம்பியா திட்டம்..!

போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரின் 60 நீர்யானைகளை இந்தியாவுக்கு அனுப்ப கொலம்பியா திட்டம்..!
மறைந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரால் வளர்க்கப்பட்ட நீர்யானைகளை இந்தியாவுக்கு அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது.
கடந்த 1993ல் எஸ்கோபர் இறந்த பின்னர் அவரது பண்ணை வீட்டில் வளர்த்த ஏராளமான விலங்குகள் இடம் மாற்றப்பட்டன. இதில் நீர்யானைகள் மட்டும் அங்கேயே இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 160ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் ஆயிரத்து 500ஐக் கடக்கலாம் என்று கூறும் அதிகாரிகள், இதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 60 நீர்யானைகளை இந்தியாவுக்கும், 10 நீர்யானைகளை மெக்ஸிகோவுக்கும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
Comments