ஏடிஎம்மிற்கு வரும் அப்பாவிகளின் பணம் தொடர் திருட்டு.. மோசடி நபரை சுற்றி வளைத்து தட்டி தூக்கிய போலீஸ்..!

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க வரும் எழுத படிக்கத் தெரியாத மக்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கிக் கொண்டு தன்னிடமுள்ள போலி கார்டை மாற்றிக் கொடுத்து அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மடக்கினர்.
ஏ.டி.எம். வரும் அப்பாவிகளை ஏமாற்றி, பணம் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. சிசிடிவி காட்சியை கொண்டு அந்த நபரை போலீசார் தேடி வந்த நிலையில், ஏ.டி.எம் ஒன்றின் உள்ளே அந்த நபர் இருப்பதாக துணை கண்காணிப்பாளர் சிந்துக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்ததில், ஓசூரை சேர்ந்த ரவி என்பதும், 10க்கும் மேற்பட்டவர்களிடம் 2 லட்சம் ரூபாய் கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரவியை கைது செய்து, பிரிட்ஜ், எல்இடி டிவி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments