மருந்து வாங்க கூட காசில்லாமல் தவிக்கும் பிதாமகன் தயாரிப்பாளர்..! உதவிக்காக காத்திருக்கிறார்

0 29928
மருந்து வாங்க கூட காசில்லாமல் தவிக்கும் பிதாமகன் தயாரிப்பாளர்..! உதவிக்காக காத்திருக்கிறார்

விக்ரம் சூர்யா நடித்த பிதாமகன், விஜயகாந்தின் கஜேந்திரா உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்த பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.ஏ.துரை நடக்க இயலாமல் , மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் சாலிகிராமத்தில் தவிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்தை தயாரித்தவர் எவர்கிரீன் மூவிஸ் வி.ஏ.துரை.

சத்யராஜ் நடிப்பில் என்னம்மா கண்ணு, விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா, ரஜினி தயாரித்த பாபா படத்தின் தயாரிப்பு நிர்வாகி என ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறந்தவர் வி.ஏ.துரை.

விஜயகாந்தை வைத்து எடுத்த கஜேந்திரா படத்தால் பெரிய அளவில் கடனாளியானதால் புதிதாக படம் தயாரிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். 10 வருடத்திற்கு முன்பு மனைவி மற்றும் ஒரே மகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை, தான் பிதாமகன் எடுத்த போது அடுத்த படத்தையும் தனக்கே இயக்கித்தர ஒப்புக் கொண்ட பாலாவுக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்ததாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இழுத்தடித்த பாலாவிடம் இருந்து அந்த பணத்தை திரும்பக்கேட்டு பாலாவின் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் எல்லாம் செய்தும் பணம் கிடைக்கவில்லை என்று நண்பர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடக்க இயலாமல் , காலில் ஆறாத ரணத்துடன், சாலிகிராமத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள வி.ஏ.துரை, உதவி கேட்டு உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துரையின் பரிதாப நிலை குறித்து தயாரிப்பாளர் விடியல்ராஜூ , தயாரிப்பாளர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்தார் . இதையடுத்து, தயாரிப்பாளர் சங்க செயலாளர் மன்னன் , அவருக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்

ஆரம்ப காலத்தில் வி.ஏ.துரை எஸ்.பி முத்துராமனிடம் உதவியாளராக பணியாற்றியதால் நடிகர் ரஜினி காந்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments