சென்னையில் ஜப்பானிய நாட்டின் ஹினமத்சூரி கொலுபொம்மை திருவிழா.. இந்திய கலாச்சார உடையில் வந்து கொலுவை பார்வையிட்ட ஜப்பானியர்கள்

சென்னை, அமைந்தகரையில் உள்ள ஜப்பான் மொழி கற்பிக்கும் தனியார் பள்ளியில் ஜப்பானிய நாட்டின் ஹினமத்சூரி எனும் கொலு பொம்மை காட்சி நடைபெற்றது.
சென்னை, அமைந்தகரையில் உள்ள ஜப்பான் மொழி கற்பிக்கும் தனியார் பள்ளியில் ஜப்பானிய நாட்டின் ஹினமத்சூரி எனும் கொலு பொம்மை காட்சி நடைபெற்றது.
ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ஆம் தேதி பொம்மைகளை காட்சிப்படுத்தும் திருவிழா நடைபெறும். அதனையொட்டி சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் ஜப்பானிய மற்றும் இந்திய கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜப்பானிய பெண்கள் கோலம் போட்டும், பூக்கள் கட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்துவந்த ஜப்பானிய இளைஞர், ஒரே கலாச்சாரத்தை கொண்டுள்ள இந்தியாவும் ஜப்பானும் பல கலாச்சார முறைகளில் ஒத்துப்போவதாக தெரிவித்தார்.
Comments