திமுக அரசுக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் - அண்ணாமலை

வடஇந்தியர்கள் குறித்து ஆட்சி வருவதற்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏற்கனவே பேசிய வீடியோக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை மீது இருபிரிவினரிடையே மோதலை உருவாக்கியதாக 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், திமுகவின் வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டதற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, தன்னை கைது செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் வழங்குவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். pic.twitter.com/yLtf9LNfAH
Comments