செவிலியரை கடத்த முயன்ற 2 போலீசார் உள்பட 3பேர் கைது..!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே செவிலியரை கடத்த முயன்ற 2 போலீசார் உள்பட 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்யாணிபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மணிமுத்தாறில் உள்ள 9 - வது பட்டாலியனில் போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய செவிலியரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த செவிலியருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள தகவலை அறிந்த மாரியப்பன் தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர் அருண் உள்பட நான்கு பேருடன் அவரது வீட்டிற்கு சென்று கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Comments