முதல்வரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர் - அமைச்சர் மா.சு

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டினார்.
சென்னை நந்தனம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 3 கோடியே 70 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியோடு, 900 இருக்கைகளுடன் அமைய உள்ள கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
Comments