இந்தியா - பாக். பிரிவினையின் போது பிரிந்த சீக்கிய சகோதரர்கள், 75 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்தனர்..!

0 1224

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த இரு சீக்கிய சகோதரர்கள், 75 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்தனர்.

சுதந்திரத்திற்கு முன்பு ஹரியானாவில் கோம்லா கிராமத்தில் சகோதரர்கள் குருதேவ் சிங், தயா சிங் மறைந்த தங்களது தந்தையின் நண்பரான கரீம் பாஷ் உடன் வசித்து வந்தனர்.

1947ல் பிரிவினையின் போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு குருதேவ் சிங் உடன் கரீம் பாஷ் புலம்பெயர்ந்தார். ஹரியானாவில் உள்ள தனது உறவினரது வீட்டில் தயா சிங் இருந்துவிட்டார்.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருதேவ் சிங் காலமானார். அவர் இறப்பதற்கு முன், தனது சகோதரர் தயா சிங்-கை கண்டுபிடித்து தரும்படி இந்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியதாக குருதேவ் சிங்-கின் மகன் முகமது ஷரீப் கூறினார்.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் முகமது ஷரீப் தனது சித்தப்பா தயா சிங்-கை கண்டுபிடித்தார். 75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குருதேவ் சிங், தயா சிங்-கின் குடும்பத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் மலர்கள் தூவி மகிழ்ச்சியாக மீண்டும் ஒன்றிணைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments