"இந்தியர்களுக்கு மின்சாரமும் ஆஸ்திரேலியர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியவர் அதானி" - ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் கருத்து

0 1878
"இந்தியர்களுக்கு மின்சாரமும் ஆஸ்திரேலியர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியவர் அதானி" - ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் கருத்து

இந்திய தொழிலதிபர் அதானி மீதும் அவரது நிறுவனங்கள் மீதும் மிகுந்த மரியாதை மற்றும் அபிமானம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டோனி அபாட், ஆஸ்திரேலியாவில் சுரங்கம் அமைப்பது தொடர்பான வழக்கில் அதானிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

தற்போது மீண்டும் அதானிக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கும் அவர், இந்தியர்களுக்கு மின்சாரத்தையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கியவர் அதானி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டு குறித்த விவரங்கள் தமக்குத் தெரியாது என்று கூறிய அவர், உண்மையிலேயே முறைகேடுகள் நடந்திருந்தால் பெருநிறுவன கட்டுப்பாட்டாளர்கள் தங்களது பணியைச் செய்வார்கள் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments