காதலன் வீட்டில் தஞ்சமடைந்த பெண்ணை உறவினர்கள் அழைத்துச் செல்ல முயன்றபோது மோதல்.. காதலனின் மாற்றுத்திறனாளி சகோதரர் உயிரிழப்பு..!

0 1784
காதலன் வீட்டில் தஞ்சமடைந்த பெண்ணை உறவினர்கள் அழைத்துச் செல்ல முயன்றபோது மோதல்.. காதலனின் மாற்றுத்திறனாளி சகோதரர் உயிரிழப்பு..!

நாகை அருகே காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்ணை, அவரது உறவினர்கள் அழைத்துச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட மோதலில் காதலனின் மாற்றுத்திறனாளி சகோதரர் உயிரிழந்தார்.

காமேஸ்வரத்தைச் சேர்ந்த தினேஷும் புதுப்பள்ளியைச் சேர்ந்த சுகுணாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி சுகுணா வீட்டை விட்டு வெளியேறி தினேஷ் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஆத்திரத்துடன் தினேஷ் வீட்டுக்குச் சென்ற சுகுணாவின் தந்தை, சகோதரன் மைக்கேல் டைசன் அவரது நண்பர் உள்ளிட்டோர், தினேஷையும் அவரது பெற்றோர் மற்றும் அவரது பார்வைத்திறனற்ற சகோதரர் ஐப்பனையும் தாக்கிவிட்டு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி அய்யப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சுகுணாவின் தந்தை சோமசுந்தரம், சகோதரர் மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பரான அப்துல் சலாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments