நிலப்பிரச்சனை.. முன்னாள் ராணுவ வீரர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவர் படுகாயம்..!

0 784

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நிலம் வாங்கிய தகராறில் முன்னாள் ராணுவ வீரர் இரட்டைக்குழல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த நபருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காரைக்குடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால் தனக்கு சொந்தமான நாலரை ஏக்கர் நிலத்தை, அவரது உறவினர்களான ராஜாக்கண்ணு, கருப்பையா ஆகியோரிடம் ஐந்து ஏக்கர் என சொல்லி விற்றதாக கூறப்படுகின்றது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தங்கள் பணத்தை திருப்பி கேட்பதற்காக கருப்பையா, ராஜாக்கண்ணு ஆகியோர் தனபாலின் வீட்டிற்கு சென்றபோது தனபால் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதில் கருப்பையாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments