கிரீஸில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலி எண்ணிக்கை 38ஆக உயர்வு!

0 834

கிரீஸில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது.

350 பயணிகளுடன் ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு சென்ற ரயில், லாரிசா எனும் பகுதியில் சரக்கு ரயிலுடன் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டன. அதில் 2 பெட்டிகள் முழுவதும் உருக்குலைந்தன.

இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்த நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியானோரில் பலர், மாணவர்கள் ஆவர்.

விடுமுறை முடிந்து ரயிலில் திரும்பிக்Greece கொண்டிருந்தபோது அவர்கள் பலியாகியுள்ளனர். மனித தவறு காரணமாக விபத்து நேரிட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments