பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பைக்குள் நுழைந்துள்ளதாக என்ஐஏ எச்சரிக்கை..!

பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றவர் மும்பைக்குள் நுழைந்துள்ளதாகவும், அவரால் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் என்ஐஏ எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில போலீஸாருக்கு உச்சப்பட்ச எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தீவிரவாதி சர்பராஸ் மேமன் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சீனா, ஹாங்காங் நாடுகளிலும் பயிற்சி பெற்றிருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA) எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து மத்திய தீவிரவாத எதிர்ப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதியின் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட விபரங்கள் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Comments