சைபர் குற்றங்கள் குறித்து பெண்கள் தைரியமாக"1930" என்ற எண்ணில் புகாரளிக்க வேண்டும்..!

சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி ஐபிஎஸ், நடிகை சுகாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய சைபர் கிரைம் பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் கூறினார்.
"1930" என்ற எண்ணை தொடர்பு கொண்டு சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments