வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த காரை தீ வைத்து எரித்த போதை ஆசாமி..!

0 1384

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் முன் விரோதத்தில் பக்கத்து வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

குதிரைபந்திவிளை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசஷும் அனீஷ்குமாரும் அருகருகே குடியிருப்பவர்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட அனீஷ்குமார், போதையில் அடிக்கடி வெங்கடேஷ் குடும்பத்தினரை வம்பிழுப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

நேற்று கையில் மது பாட்டிலோடு, அரை போதையுடன் வந்த அனீஷ்குமார், வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அருகே நின்று மது அருந்தியுள்ளான்.

“குடித்துவிட்டு கார் மீது வாந்தி எடுத்துவிடாதே” என்று கூறி வெங்கடேஷ் அவனை விரட்டி இருக்கிறார் .

ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற அனீஷ்குமார், இன்று அதிகாலை கையில் பெட்ரோலுடன் சென்று வெங்கடேஷின் கார் மீது ஊற்றி எரித்துள்ளான். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments