சாலை வளைவில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து.. மகள் கண்முன்னே முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மகள் கண்முன்னே முன்னாள் ராணுவ வீரர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
புலியடிதம்மம் பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது மகளை கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சருகணி - தேவகோட்டை சாலையில் கோபாலபுரம் அருகே வளைவு ஒன்றில் திரும்ப முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த இன்னோவா கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் அருளானந்தன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரை ஓட்டி வந்த தஞ்சையைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments