ஈரோட்டில் வாக்குச்சாவடி மையத்தில் குடிதண்ணீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட வாக்காளர்கள்..!

இடைத்தேர்தல் நடைபெற்று வரும் ஈரோட்டில் வாக்குச்சாவடி மையத்தில் குடிதண்ணீர் கேட்டு வாக்காளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியினரே கேனில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கருங்கல்பாளையம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள நிலையில், அங்கு இருக்கை வசதி செய்யப்படாததால் வாக்குச் செலுத்த வந்த முதியவர்கள் நீண்டநேரம் வரிசையில் நின்றதாக கூறப்படுகிறது.
மேலும், வாக்குச்சாவடியில் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லையெனக் கூறி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாமாக முன்வந்து குடிநீருக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
Comments